MARC காட்சி

Back
திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
245 : _ _ |a திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் -
246 : _ _ |a திருநல்லூர்
520 : _ _ |a சோழநாட்டு (தென்கரை)த் தலம். கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருவடி சூட்டியதும், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதுமாகிய அற்புதத் தலம். இச்சிகரத்திற்கு - மலைக்குச் ‘சுந்தரகிரி’ என்ற பெயர; தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது. திருச்சித்திமுற்றத்துச் சிவக்கொழுந்தீசரை வழிபட்டு, ‘கோவாய் முடுகி’ என்ற பதிகம் பாடி, தனக்குத் திருவடி தீட்சை செய்யுமாறு அப்பர் வேண்ட, அவரை இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளி, “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம், என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டி”யருளினார். இச்செய்தியை நம்பியாண்டார் நம்பிகளும் தாம் அருளியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியுள் “நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்” எனக் குறித்துள்ளார். இதுபற்றியே இன்றும் இத்தலத்தில் சடாரி போன்று திருவடி சூட்டப்படுகின்றது. அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் அவருக்குக் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய (முத்தியருளிய) அருட்சிறப்பும் உடையது இத்தலம். மிகப்பழமையான, அருமையான, சிறப்புமிக்க திருக்கோயில்.
653 : _ _ |a கோயில், சைவம், சிவன், திருக்கழுக்குன்றம், சோழ நாட்டுத்தலம், தேவாரத் திருத்தலம், திருநல்லூர், திருநல்லூர்ப் புராணம், கமலை வைத்தியநாத தேசிகர், திருவாவடுதுறை ஆதீனம், பஞ்சவர்ணேசுவரர், கல்யாண சுந்தரேசுவரர், பெரியாண்டேசுவரர், சப்தசாகர தீர்த்தம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.92517536
915 : _ _ |a 79.29973248
916 : _ _ |a பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்
918 : _ _ |a கிரிசுந்தரி, பர்வதசுந்தரி, கல்யாணசுந்தரி
922 : _ _ |a வில்வம்
923 : _ _ |a சப்தசாகர தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a மாசிமகப் பெருவிழா
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது. ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை - ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது. பிருங்கி முனிவர், வண்டு வடிவமாய் வழிபட்டதால் இச்சிவலிங்கத்தில் துறைகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள சப்த சாகரதீர்த்தம் மிக்க பெருமையுடையது. இதில் நீராடினால் உடற்பிணி நீங்கப் பெறுவர். குந்திதேவி, கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் வைத்துவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமாகத் தௌமிய முனிவர் சொற்படி இத்தலத்தையடைந்து, இங்கு இருந்த உரோமசர் முனிவரைப் பார்த்துத் தனக்குக் கழுவாய் கூறுமாறு வேண்டினாள். அவரும் “நாளை மாசிமகம். சப்த சமுத்திர ஸ்நானம் செய்க” என்றார். “நாளைக்குள் எங்ஙனம் ஏழுகடல்களில் ஸ்நானம் செய்ய முடியும்?” என்று, அவளுமள் இறைவனை வேண்ட, அவள் வேண்டுதலையேற்ற இறைவனும் இத்தீர்த்தத்தினை ஏழுகடல்களாகப் பாவித்து நீராடுமாறு அருள, குந்தியும் அவ்வாறே நீராடிப் பாவம் தீரப்பெற்றாள் என்று சொல்லப்படுகிறது. (கோயிலுள் குந்தியின் உருவம் உள்ளது மேலே குறிக்கப்பட்டுள்ளது.) இதனால் இத்தீர்த்தம் ‘சப்தசாகர தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது. முசுகுந்தன், இந்திரனிடமிருந்து தியாகராஜப் பெருமானைப் பெற்றுத் திருவாரூர் செல்லும்போது இத்தலத்தில் மூன்று நாள்கள் இருந்து, தியாகராஜப் பெருமானை எழுந்தருளுவித்துப் பூசித்து வழிபட்டான் என்னும் பெருமையுடையது.
932 : _ _ |a கோயிலின் முன்னால் உள்ளது. படித்துறைகளையுடையது. குளக்கரையில் ஒருபுறம் அமர்நீதி நாயனார் மடாலயம் உள்ளது. ஐந்து நிலைகளையுடைய அழகான ராஜகோபுரம் நம்மை அழைக்கின்றது. உள்ளே விசாலமான இடம். கவசமிட்ட கொடிமரம் உள்ளது. முன்பு விநாயகர் உள்ளார். அடுத்து வடபால் வசந்த மண்டபமும், தென்பால் அமர்நீதியார் துலையேறிய துலா மண்டபமும் ள்ளன. இங்குள்ள அஷ்டபூஜ காளி பிரசித்தி பெற்றது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது - கீழே கல்கட்டிடம் மேலே சுதை வேலைப்பாடுடையது. உள்ளே நுழைந்தால் நேரே காசி ிநாயகர் தரிசனம். வலம்பர, பாணலிங்கம், விசுவநாதர் சந்நிதிகள். சோமாஸ்கந்தர் மண்டபமும், முருகன் சந்நிதியும் உள்ளன. வடபால் அமர்நீதி நாயனார், மனைவி, குழந்தை, குந்திதேவி முதலியோரின் ருவங்கள் உள்ளன. மாடக்கோயிலில் கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், அடுத்து யோகத்தின் மேன்மையை விளக்கும் விநாயகரின் மற்றொரு உருவம், தக்ஷிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது அழகான நடராசசபை.
933 : _ _ |a திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
935 : _ _ |a தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருநல்லூர்
938 : _ _ |a திருவாரூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a வலங்கைமான் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000199
barcode : TVA_TEM_000199
book category : சைவம்
cover images TVA_TEM_000199/TVA_TEM_000199_திருநல்லூர்_பஞ்சவர்ணேசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

cg102v011.mp4

TVA_TEM_000199/TVA_TEM_000199_திருநல்லூர்_பஞ்சவர்ணேசுவரர்-கோயில்-0001.jpg